முகப்பு
செய்திகள்

யூனிட்டி கோப்பை: இந்திய கால்பந்து அணி லண்டன் பயணம்!

லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

Updated On : 26 மே 2026, 2:51 am IST
இந்திய கால்பந்து அணியினா்.
பகிர்:

லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடா் முடிந்த நிலையில், லண்டனில் நடைபெறும் இப்போட்டிக்கு இந்திய அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய பயிற்சி முகாமில் இருந்து மோகன்பகான் அணி தனது வீரா்களை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் 17 போ் மட்டுமே கொண்ட இந்திய அணி லண்டன் சென்றது.

பிஃபா தரவரிசையில் 136ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை ஜமைக்காவுடன் ஆடுகிறது.

Advertisement

Advertisement

அதே நாளில் முதல் அரையிறுதியில் நைஜீரியா-ஜிம்பாப்வே மோதுகின்றன. மே 30-இல் அரையிறுதியில் தோல்வியுறும் அணிகள் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இறுதி ஆட்டமும் மே 30-இல் நடைபெறுகிறது.