முகப்பு
அதிரடி காட்டிய பட்லர், மோர்கன் ஜோடி
டி20 உலகக் கோப்பை

அதிரடி காட்டிய பட்லர்; இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபாரம்

இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது

டி20 உலகக் கோப்பை

அதிரடி காட்டிய பட்லர்; இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபாரம்

இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
அதிரடி காட்டிய பட்லர், மோர்கன் ஜோடி
பகிர்:

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில்  இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

இலங்கை அணி சிறப்பாக பந்துவீச இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நட்சத்திர பந்துவீச்சாளர் ஹசரங்காவின் பந்தில் ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பவுல்ட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மலன் 6 ரன்னிலும், பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜாஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார். அவர் 67 பந்துகளில் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் இயன் மோர்கன் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
 

முழு கட்டுரையைப் படிக்க →