டி20 உலகக் கோப்பை

ரபாடா ஹாட்ரிக் வீண்: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

கடைசி ஓவரில் ரபாடாவின் ஹாட்ரிக் விக்கெட்டால் தென் ஆப்பிரிக்கா வென்றாலும், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.

DIN

கடைசி ஓவரில் ரபாடாவின் ஹாட்ரிக் விக்கெட்டால் தென் ஆப்பிரிக்கா வென்றாலும், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் குவித்தது.

அடுத்த களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பட்லர் ஜோடி நல்ல துவக்கம் தந்தனர். ஜேசன் ராய் 15 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் பட்லர் -  முகமது அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினர். ஆனால், 26 ரன்களில் பட்லர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெர்ஸ்டைவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

வரிசையாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அலியுடன் ஜோடி சேர்ந்த மாலன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 13வது ஓவரில் அலி 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடந்து மாலன் 33, லிவிங்ஸ்டோன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டன. தென் ஆப்பிரிக்கா அணியிலிருந்து கடைசி ஓவரை வீச ரபாடா வந்தார்.

முதல் மூன்று பந்துகளில் வோக்ஸ், மார்கன், ஜோர்டன் என மூவரையும் வரிசையாக அவுட்டாக்கி ஹார்ட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம், ஆட்டம் தென் ஆப்பிரிக்கா அணியின் கைக்கு வந்தது.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்களில் எடுத்து தோல்விடைந்தது. இருப்பினும், அரையிறுத்திக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோனது.

தோல்வியடைந்தாலும், அரையிறுதிக்கு நுழையும் ரன் ரேட் உள்ளதால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் சென்றது. இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியாவும் நுழைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT