டி20 உலகக் கோப்பை

ஆப்கானிஸ்தான் 124 ரன்கள்: நியூசிலாந்தைக் கட்டுப்படுத்தி இந்தியாவுக்கு உதவுமா?

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

DIN


நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முகமது ஷெஸாத் 4, ஹஸ்ரதுல்லா ஸஸாய் 2, ரஹமனுல்லா குர்பாஸ் 6 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, குல்பதின் நைப் மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

ரன் ரேட் குறைவாக இருந்ததால், உயர்த்தும் நோக்கில் ஸத்ரான் அதிரடிக்கு மாறத் தொடங்கினார். ஆனால், நைப் 15 ரன்களுக்கு சோதி சுழலில் வீழ்ந்தார். இதன்பிறகு, கேப்டன் முகமது நபி பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைக்க, ஸத்ரான் தனது அதிரடியைத் தொடர்ந்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்ட அவர் 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

பின்னர் நபியும், ஸத்ரானும் கடைசி கட்ட அதிரடிக்குத் தயாராகினர். டிம் சௌதி வீசிய 18-வது ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 14 ரன்கள் கிடைத்தன. அதேசமயம், நபியும் 14 ரன்களுக்கு அந்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

டிரென்ட் போல்ட் வீசிய 19-வது ஓவரை ஸத்ரான் பவுண்டரியுடன் தொடங்கினாலும், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். அதே ஓவரில் அடுத்து வந்த கரிம் ஜனத்தும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ரஷித் கான் 2 ரன்கள் மட்டும் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சௌதி 2 விக்கெட்டுகளையும், ஆடம் மில்ன், ஜேம்ஸ் நீஷம் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

SCROLL FOR NEXT