டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: முறியடிக்க முடியாத விராட் கோலியின் சாதனை

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற விராட் கோலியின் சாதனையை இந்தமுறை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

DIN

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற விராட் கோலியின் சாதனையை இந்தமுறை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

2021 டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமுக்குக் கிடைத்துள்ளது. அவர் 6 இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்தார். 7 இன்னிங்ஸில் 289 ரன்கள் எடுத்து 2-ம் இடம் பிடித்துள்ளார் டேவிட் வார்னர். 

இந்நிலையில் 2014 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி 6 இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தார். 2009-ல் இலங்கையின் தில்ஷன் எடுத்த 317 ரன்களைக் கடந்து டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் கோலி. 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தின் தமிம் இக்பால் அதிகபட்சமாக 6 இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தார்.

அதேபோல 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் எந்த வீரராலும் கோலியின் சாதனையைத் தாண்ட முடியவில்லை. இம்மும் பாபர் ஆஸம் அதிகபட்சமாக 303 ரன்கள் எடுத்தார். இதனால் கோலி தனது சாதனையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.  

டி20 உலகக் கோப்பை: அதிக ரன்கள்

319 ரன்கள் - விராட் கோலி (2014)
317 ரன்கள்: தில்ஷன் (2009)
303 ரன்கள்: பாபர் ஆஸம் (2021)
302 ரன்கள்: ஜெயவர்தனே (2010)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: எம்.எச். ஜவாஹிருல்லா

நீதிமன்றத் தீா்ப்பினால் விஜய்யின் ஊழல் ஒழிப்பு தெரிந்துவிட்டது! - கி. வீரமணி

மக்காச்சோளத்துக்கு உத்தரவாத விலை நிா்ணயம்: எம்.பி. வலியுறுத்தல்

பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்

SCROLL FOR NEXT