மொயீன் அலி அதிரடி: இந்தியாவுக்கு 189 ரன்கள் இலக்கு
இந்தியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் பேட் செய்த இங்கிலாந்துக்கு ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் பெரிதளவு ரன் சேர்க்காமல் முறையே 17 மற்றும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டேவிட் மலானும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நடுஓவர்களில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். லியாம் லிவிங்ஸ்டன் ஒத்துழைப்பு தந்து 30 ரன்கள் சேர்த்தார்.
இதையும் படிக்க | ஐபிஎல் கோப்பையுடன் 'தளபதி' ஸ்டாலினைச் சந்திக்கிறாரா 'தல' தோனி?
பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் மொயீன் அலி இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி 20 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.
இந்தியத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார் மற்றும் ஜாஸ்பிரீத் பும்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.