டி20 உலகக் கோப்பை

ரோஹித் சர்மா - கே.எல். ராகுல் தொடக்க வீரர்கள்: விராட் கோலி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் களமிறங்குவார்கள்...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் களமிறங்குவார்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை பற்றி விராட் கோலி கூறியதாவது:

ஐபிஎல் போட்டிக்கு முன்பு நிலைமை வேறாக இருந்தது. இப்போது மேல்வரிசையில் ராகுலைத் தாண்டி யோசிப்பது கடினம். ரோஹித் சர்மா உலகத் தரமான வீரர். அவர் தொடக்க வீரராக அபாரமாக விளையாடி வருகிறார். நான் 3-ம் நிலை வீரராக விளையாடுகிறேன். இப்போதைக்கு இது மட்டுமே என்னால் கூற முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT