இங்கிலாந்து அணி 
டி20 உலகக் கோப்பை

ரொம்பக் கஷ்டம்: டி20 உலகக் கோப்பையில் குரூப் 1 பிரிவில் போட்டியிடும் பலமான அணிகள்!

இந்த இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிர்ச்சி ஏற்படுத்த மாட்டார்கள் எனச் சொல்ல முடியாது.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இப்போது 11 அணிகள் உறுதிசெய்யப்பட்டு விட்டன. 

இன்று நடைபெறும் நமீபியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் வெல்லும் அணி, குரூப் 2 பிரிவில் இடம்பெறும். 

சூப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகள் குரூப் 1, குரூப் 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா - அயர்லாந்து ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆனால் குரூப் 1 பிரிவில் உள்ள அணிகள் எவை தெரியுமா?

நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், 2019 ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் வங்கதேசம்!

குரூப் 1 பிரிவை எண்ணிப் பாருங்கள். நன்றாக விளையாடும் நாளில் இலங்கை, வங்கதேச அணிகளால் எந்த ஓர் அணியையும் வீழ்த்த முடியும். சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடர்களில் இலங்கை அணி அனுபவம் குறைந்த வீரர்கள் அடங்கிய இந்தியாவையும் வங்கதேச அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு முன்னணி அணிகளையும் வீழ்த்தியுள்ளன. இதனால் இந்த இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிர்ச்சி ஏற்படுத்த மாட்டார்கள் எனச் சொல்ல முடியாது. மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என நான்கு அணிகளுக்கும் சூப்பர் 12 சுற்று அவ்வளவு எளிதாக அமையாது. இதிலிருந்து 2 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற கடுமையாகப் போராட வேண்டும். 

குரூப் 1 பிரிவில் இல்லாத அணிகள் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT