டி20 உலகக் கோப்பை

இந்திய அணியின் XI: லக்‌ஷ்மண் சொல்வது என்ன?

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஜடேஜாவைத் தவிர மேலும் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும் என...

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஜடேஜாவைத் தவிர மேலும் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

அக்டோபர் 24 அன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள் பற்றி முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் கூறியதாவது:

இந்திய அணியில் தேர்வாகக் கூடிய வீரர்கள் பலர் உள்ளார்கள் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவையும் ராகுலையும் தேர்வு செய்வேன். நடுவரிசையில் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரும் அடுத்ததாக பாண்டியாவும் ஜடேஜாவும் பேட்டிங் வரிசையில் இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் ஆகியோர் அணியில் இடம்பெறவேண்டும். முதல் 7 பேட்ஸ்மேன்களும் ரன்கள் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT