முகப்பு
டி20 உலகக் கோப்பை

ஆஸி. அணியில் நிலவும் பலத்த போட்டி: கம்மின்ஸ்

ஆஸி. அணியில் இடம்பெற பலத்த போட்டி நிலவுவதால் யார் வேண்டுமானாலும் வாய்ப்பைத் தவறவிடலாம் என வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
கம்மின்ஸ் (கோப்புப் படம்)
பகிர்:

ஆஸி. அணியில் இடம்பெற பலத்த போட்டி நிலவுவதால் யார் வேண்டுமானாலும் வாய்ப்பைத் தவறவிடலாம் என வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று நாளை முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பற்றி ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் கூறியதாவது:

பந்துவீச்சாளர்களில் ஆறு, ஏழு, எட்டு வீரர்கள் நன்றாக விளையாடி அணியில் இடம்பெற தயாராக உள்ளார்கள். எனவே யார் இடம்பெறப் போகிறார்கள் என்பது பற்றிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கும். ஐந்து பந்துவீச்சாளர்கள் வேண்டுமா இல்லை நான்கு பந்துவீச்சாளர்களுடன் ஆல்ரவுண்டர்களைச் சார்ந்திருக்க வேண்டுமா என்பதுதான் முக்கியமான விவாதமாக இருக்கும். ஆட்டத்துக்கு ஆட்டம் இது மாறுபடும். எனவே யார் வேண்டுமானாலும் அணியில் இடம்பெறாமல் போகலாம். இது உலகக் கோப்பை. எனக்கும் விளையாட வேண்டும் என்றுதான் ஆர்வம். யாராவது சிலர் அணியில் இடம்பெற முடியாத நிலைமை ஏற்படும். 2, 3 இடங்களுக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 குரூப் ஆட்டங்கள் உள்ளன. எனவே உங்களுக்கு ஏதாவது ஓர் ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும். எங்கள் அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளார்கள். எல்லோரும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார்கள். அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments