டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 143 ரன்கள் இலக்கு
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
டி20 உலகக் கோப்பைடி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 143 ரன்கள் இலக்கு
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா இரு மாற்றங்கள். வங்கதேச அணியில் செளம்யா சர்காரும் டஸ்கினும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மே.இ. தீவுகள் அணியில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டுள்ளார். ராஸ்டன் சேஸ் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.
ஹேடன் வால்ஷுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் கெயில் 4, எவின் லெவிஸ் 6 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் வந்தவர்களில் ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் மட்டுமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க- டி20 உலகக் கோப்பை போரடிப்பது ஏன்?
சேஸ் 39, நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் இன்னொருமுறை தோல்வியடையும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.
எனவே நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி கட்டாயமாக ஜெயிக்கவேண்டிய நிலையில் உள்ளது.