அர்ஷ்தீப் சிங் படம் | பிசிசிஐ
டி20 உலகக் கோப்பை

உலகக் கோப்பை வெற்றியை குடும்பத்தினருடன் கொண்டாட விரும்பும் அர்ஷ்தீப் சிங்!

டி20 உலகக் கோப்பை வெற்றியை குடும்படுத்தினருடன் கொண்டாட விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பை வெற்றியை குடும்படுத்தினருடன் கொண்டாட விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. பெரில் சூறாவளி காரணமாக பார்படாஸில் சிக்கிக் கொண்ட இந்திய அணி தாயகம் திரும்புவதற்கு தாமதம் ஆனது. அதன்பின், உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றியை குடும்படுத்தினருடன் கொண்டாட விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

வெற்றிக் கொண்டாட்ட வாகனப் பேரணியின்போது இது தொடர்பாக அர்ஷ்தீப் சிங் பேசியதாவது: அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்த தருணத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி என்றார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃப்ரூக்கியுடன் இணைந்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னுவதெல்லாம் பொன்தான்... கங்கனா ரணாவத்!

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

தெரியாத எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ்! 97,000 ரூபாய் கொள்ளை! | Cyber Shield | Cyber Crime

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - திருமா

SCROLL FOR NEXT