முகப்பு
டி20 உலகக் கோப்பை

இந்திய அணிக்கு கிடைத்த வரவேற்பு குறித்து மனம் திறந்த ஜஸ்பிரித் பும்ரா!

டி20 உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசியுள்ளார்.

Updated On : 15 ஜூலை, 2024 at 1:41 PM
ஜஸ்பிரித் பும்ரா
பகிர்:

டி20 உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. பெரில் சூறாவளி காரணமாக பார்படாஸில் சிக்கிக் கொண்ட இந்திய அணி தாயகம் திரும்புவதற்கு தாமதம் ஆனது. அதன்பின், உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கனவு உலகத்தில் வாழ்ந்து வருவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில நாள்களாக கனவு உலகத்தில் வாழ்வது போல் இருக்கிறது. இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்காக அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்றார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →