டி20 உலகக் கோப்பைத் தொடரை நெதர்லாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் குரூப் டி-யில் இடம்பெற்றுள்ள நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் நேற்று நடைபெற்ற போட்டியில் மோதின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரைரி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த நேபாளம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ரோஹித் பௌடல் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கரண் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் டிம் பிரிங்கிள் மற்றும் வான் பீக் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். வான் மிகீரன் மற்றும் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடௌத் 48 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.