இலங்கைக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட் செய்யவில்லையென்று அவர்களுக்கு தெரியுமென வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (ஜூன் 7) நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேசம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வங்கதேசம் 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அதனால் சிறிது போராடி வெற்றி பெறும் சூழலுக்கு வங்கதேசம் ஆளானது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட் செய்யவில்லையென்று அவர்களுக்கு தெரியுமென வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த போட்டி குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால், இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் அவர்கள் நன்றாக பேட் செய்யவில்லை எனத் தெரியும். எல்லாராலும் எல்லா நாள்களிலும் சிறப்பாக விளையாட முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.