டி20 உலகக் கோப்பை

பாபர் அசாம், ஷகின் அஃப்ரிடி இடையே மோதலா? உதவிப் பயிற்சியாளர் பதில்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடிக்கும் இடையே மோதல் நிலவுகிறதா?

DIN

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடிக்கும் இடையே மோதல் நிலவுகிறதா என்பது குறித்து அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் அஸார் மஹ்முத் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கம் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. அதன்பின், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கனடாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்விகளை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அணியில் ஒற்றுமை இல்லை எனவும், அணிக்குள் இரு பிரிவுகள் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். அதில் ஒரு பிரிவு பாபர் அசாமுக்கு ஆதரவாக இருப்பதாகவும், மற்றொரு பிரிவு ஷகின் அஃப்ரிடிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடிக்கும் இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை என அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் அஸார் மஹ்முத் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாபர் அசாம் மற்றும் ஷகின் அஃப்ரிடிக்குமிடையே பிரச்னை இருப்பதாக வாசிம் அக்ரம் கண்டிப்பாக கூறியிருக்கலாம். ஆனால், அது பற்றி எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவருக்குமிடையே பிரச்னை இருப்பதை நான் பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் நன்றாக பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகிறார்கள். எந்த ஒரு தனிப்பட்ட நபரின் செயல்பாடுகளாலும் நாங்கள் தோல்வியடையவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT