மே.இ.தீவுகள் அணி PTI
டி20 உலகக் கோப்பை

‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியது மே.இ.தீவுகள்!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை மே.இ.தீ. அணிகள் வென்றது.

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை மே.இ.தீ. அணிகள் வென்றது.

முதலில் பேட்டிங் ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவர் முடிவில் 149/9 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரூதர்போர்டு 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் மே.இ.தீ. அணிக்கு பலம் சேர்த்தார். உடன் ரஸ்ஸெல் 7 பந்துகளில் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நியூசி. சார்பில் போல்ட் 3, சௌதி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 136/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

க்ளென் பிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்தார். கடைசி வரை போராடிய மிட்செல் சான்ட்னர் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் அவரது போராட்டம் வீண் ஆனது. 13 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீ. அணி வென்றது.

மே.இ.தீ. அணி சார்பில் அல்ஜாரி ஜோசப் 4, குடகேஷ் மோடி 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் மே.இ.தீ. அணி சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் சி பிரிவில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து 2 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூதர்போர்டு ஆட்ட நாயகான தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT