சூர்யகுமார் யாதவ் படம் | AP
டி20 உலகக் கோப்பை

சூர்யகுமார் யாதவை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக சூர்யகுமார் யாதவை இந்திய அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

DIN

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக சூர்யகுமார் யாதவை இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன் பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 49 பந்துகளில் 50 ரன்கள் ( 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக சூர்யகுமார் யாதவை இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூயார்க் விக்கெட்டின் வேகத்தினை சூர்யகுமார் யாதவ் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதுபோன்ற ஆடுகளத்தில் என்ன செய்ய முடியும் என்பதை அவர் தெரிந்து வைத்துள்ளார். தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் பிற்பகுதியில் விருப்பப்பட்ட ஷாட்டுகளை விளையாடிக் கொள்ளலாம் என அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனையே அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் செயல்படுத்தினார். இதுபோன்று விளையாடுவது எளிதான விஷயம் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT