அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றும் வரும் உலகக் கோப்பை லீக் சுற்றின் 34 ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின.
ஆண்டிகுவாவில் சர் விவியன் ரிச்சர்டு மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழையால் தாமதமானது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற முனைப்பில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பட்லர் மறும் பில் சால்ட் ஆகியோர் களமிறங்கியது.
இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 39 வயதான டேவிட் வைஸ் வீசிய தொடக்க ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. கேப்டன் ஜோஸ் பட்லர் வேகப்பந்து வீச்சாளர் ரூபன் டிரம்பெல்மேன் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி வெளியேறினார். பில் சால்ட்டும் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த பேர்ஸ்டோ மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் பந்தை நாலபுறமும் பறக்க விட்டனர்.
பேர்ஸ்டோ 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்னும், ஹாரி புரூக் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த மொயீன் அலி (16), லியாம் லிவிங்ஸ்டன்(13) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.
10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.
பின்னர் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மைக்கேல் வான் 33 ரன்களும், நிக்கோலஸ் டாவின் 18 ரன்களும், டேவிட் வைஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.