படம் | AP
டி20 உலகக் கோப்பை

ரிஷப் பந்த்தின் சிறந்த ஆட்டம் இனிதான் வரவுள்ளது: இஷாந்த் சர்மா

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த்தின் சிறப்பான ஆட்டம் இனிமேல்தான் வரவிருப்பதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த்தின் சிறப்பான ஆட்டம் இனிமேல்தான் வரவிருப்பதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

கார் விபத்துக்குப் பிறகு நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை சிறப்பாக வழிநடத்தினார். 13 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் 446 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த்தின் சிறப்பான ஆட்டம் இனிமேல்தான் வரவிருப்பதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இஷாந்த் சர்மா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவதை ஆர்வமாக கவனித்து வருகிறேன். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த ஆடுகளங்களில் தொடர்ச்சியாக ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தில்லி கேப்பிடல்ஸ் அணியில் அவருடன் இணைந்து விளையாடியபோது, அவர் உலகத் தரத்திலான வீரர் என்பதை தெரிந்துகொண்டேன். டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார்.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 96 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT