முகமது சிராஜ் 
டி20 உலகக் கோப்பை

குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும்: பியூஸ் சாவ்லா

இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும்.

DIN

இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக கருதப்படும் பார்படாஸில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் கண்டிப்பாக கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளர் தேவை. அதிலும் குறிப்பாக, இதுபோன்ற ஆடுகளங்களில் கண்டிப்பாக கூடுதல் ஸ்பின்னர் தேவை. அணியில் அக்‌ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருக்கிறார்கள். ஹார்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசுகிறார். அதனால், அர்ஷ்தீப் சிங் அல்லது முகமது சிராஜ் இருவரில் ஒருவர் குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் இடம்கிடைக்க வழிவிட வேண்டும். அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அதனால், முகமது சிராஜ் குல்தீப் யாதவுக்காக வழிவிட வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT