படம் | AP
டி20 உலகக் கோப்பை

அதிரடியில் மிரட்டிய ஷாய் ஹோப்பை பாராட்டிய மே.இ.தீவுகள் கேப்டன்!

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப்பை அந்த அணியின் கேப்டன் பாராட்டியுள்ளார்.

DIN

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப்பை அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் பாராட்டியுள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாவது போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் (4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப்பை அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் பாராட்டியுள்ளார்.

ரோவ்மன் பௌவல்

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தப் போட்டி மிகவும் சிறப்பானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஸ்டன் சேஸ் நன்றாக விளையாடினார். அவர் சிறப்பாக பந்துவீசினார். ஷாய் ஹோப்புக்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை.

இன்றையப் போட்டியில் அவர் அபாரமாக விளையாடினார். அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலாக காத்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி மிகப் பெரிய போட்டியாக இருக்கும். எங்களுக்கு அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT