படம் | நரேந்திர மோடி (எக்ஸ்)
டி20 உலகக் கோப்பை

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதிக் கொள்கின்றன. இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் சூப்பர் 8 சுற்றில் தோல்வியைத் தழுவியது. இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு வலுவடையும்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா மற்றும் வங்கதேசம் இரண்டு நாடுகளும் தங்களுக்குள் கலாசாரங்களை பகிர்ந்து கொள்கின்றன. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இ-விசா சேவைகள் வழங்கப்படுகின்றன. வடமேற்கு வங்கதேசத்தில் உள்ள மக்களுக்காக புதிய உயர்மட்ட ஆணையம் ஒன்று ரங்க்பூரில் அமைக்கப்பட உள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஷசீனா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT