ஜோஸ் பட்லர் படம் | AP
டி20 உலகக் கோப்பை

இங்கிலாந்தின் தோல்விக்கு தென்னாப்பிரிக்க வீரரை காரணமாக கூறும் ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைக்கும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

இந்த நிலையில், பவர் பிளேவில் தென்னாப்பிரிக்க அணி வீரர் குயிண்டன் டி காக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

குயிண்டன் டி காக்

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டக் டி காக் விளையாடிய விதம் எங்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியதாக நினைக்கிறேன். அவர் விளையாடிய ஷாட்டுகள் சிறப்பாக இருந்தது. அவரது அதிரடி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதியில் அவரது சிறப்பான ஆட்டமே வெற்றிக்கான வித்தியாசமாக அமைந்தது. பவர் பிளேவில் டி காக் சிறப்பாக விளையாடினார். ஆடுகளம் எதிர்பார்த்ததை விட மெதுவானதாக இருந்தது. ஆட்டத்தின் பிற்பகுதியில் நாங்கள் நன்றாக பந்துவீசினோம். ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடினார்கள் என்றார்.

சூப்பர் 8 சுற்றில் தனது கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT