படம் | AP
டி20 உலகக் கோப்பை

ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணி; ஆஸ்திரேலிய வீரர் பாராட்டு!

ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணி என ஆஸ்திரேலிய வீரர் அந்த அணியை பாராட்டியுள்ளார்.

DIN

ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணி என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அந்த அணியை பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறுதவதற்கான போட்டியில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை இன்று எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலை அந்த அணிக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணி என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அந்த அணியை பாராட்டியுள்ளார்.

உஸ்மான் கவாஜா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணி. அவர்களை அனைவரும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள். கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருக்க வேண்டியது. ஆனால், அவர்கள் கிளன் மேக்ஸ்வெல்லின் கேட்ச்சுகளை தவறவிட்டதால் போட்டியின் முடிவு மாறிவிட்டது. அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றி எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், மற்ற அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுகளை நாங்கள் நம்பியிருக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும். உலகின் தலைசிறந்த அணி இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் மீது அதிக அளவிலான அழுத்தம் இருக்கும் போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT