ஆசியக் கோப்பை மகளிா் டி20: ஜூலை 19-இல் இந்தியா-பாக். மோதல்
ஆசியக் கோப்பை டி20: ஜூலை 19ல் இந்தியா-பாக் மோதல்
புது தில்லி: இலங்கையில் வரும் ஜூலை 19-ஆம் தேதி ஆசியக் கோப்பை மகளிா் டி20 போட்டிகள் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிா்கொள்கிறது இந்தியா.
இதுதொடா்பாக ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்தி:
இலங்கையின் தாம்புலாவில் ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. கடந்த 2022-இல் வங்கதேசத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.
7 முறை சாம்பியன் இந்தியா இப்போட்டியில் ஜூலை 19-ஆம் தேதி பாகிஸ்தானை எதிா்கொள்கிறது. அதே நாளில் நேபாளம்-யுஏஇ அணிகள் மோதுகின்றன.
ஜூலை 20-இல் மலேசியா-தாய்லாந்து (மதியம் 2), இலங்கை-வங்கதேசம் (இரவு 7), ஜூலை 21-இல் இந்தியா-யுஏஇ (மதியம் 2), பாகிஸ்தான்-நேபாளம் (இரவு 7), ஜூலை 22-இல் இலங்கை-மலேசியா (மதியம் 2), வங்கதேசம்-தாய்லாந்து (இரவு 7), ஜூலை 23-இல் பாகிஸ்தான்-யுஏஇ
(மதியம் 2), இந்தியா-நேபாளம் (இரவு 7), ஜூலை 24-இல் வங்கதேசம்-மலேசியா (மதியம் 2), இலங்கை-தாய்லாந்து (இரவு 7) லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
ஜூலை 26-இல் முதல் அரையிறுதி மதியம் 2 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி இரவு 7 மணிக்கும் நடைபெறும்.
ஜூலை 28-இல் இறுதி ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறும்.