ரோஹித் சர்மா படம் | AP
டி20 உலகக் கோப்பை

பாபர் அசாமின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டபோதிலும், சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டனாக வலம் வந்த பாபர் அசாமின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். அணியின் கேப்டனாக இருவரும் தங்களது அணிகளை 48 போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த கேப்டன்கள் (சூப்பர் ஓவர் வெற்றிகளையும் சேர்த்து)

ரோஹித் சர்மா - 48 வெற்றிகள் (60 போட்டிகளில்)

பாபர் அசாம் - 48 வெற்றிகள் (85 போட்டிகளில்)

பிரையன் மசாபா - 45 வெற்றிகள் (60 போட்டிகளில்)

இயான் மோர்கன் - 44 வெற்றிகள் (72 போட்டிகளில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT