டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஆப்கானிஸ்தான் 115/5 ரன்களை எடுக்க வங்கதேசம் 105/10 ஆல் அவுட் ஆனது. அதனால் ஆஸி. வெளியேறியது.
இந்தப் போட்டியில் 12ஆவது ஓவரின்போது ஆப்கன் வீரர் குல்பதின் நைப் தசைப்பிடிப்பு என கீழே விழுந்தார். ஆப்கன் அணியின் பயிற்சியாளர் சைகை காட்டியதைத் தொடர்ந்து இவ்வாறு செய்தது வர்ணனையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது. அத்துடன் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனமும் செய்யப்பட்டன.
அவர் அவ்வாறு செய்யாவிட்டால் வங்கதேசம் வென்றிருக்கும். ஆஸி. அரையிறுதிக்கு வந்திருக்க அதிகமான வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆஸி. கேப்டன் (அணித் தலைவர்) மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
அதைப் பார்க்கும்போது எனக்கு சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. கடைசியில் அது போட்டியினை பெரிதாக பாதிக்கவில்லை. அதனால் நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்த்தோம். ஆனால் அது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. போட்டி நன்றாக இருந்தது.
அணியாகத்தான் அந்தப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். போட்டியில் அதிகமான சுவாரசியங்களும் திருப்பங்களும் இருந்தன. எங்களின் கட்டுக்க்குள் இல்லாமல் போட்டி சென்றுவிட்டது. அதற்காக நாங்கள் எங்களைத்தான் குற்றம் செல்ல வேண்டும்.
நாங்கள் உலகக் கோப்பையில் தொடர வேண்டுமென நினைதோம். ஆனால் ஆப்கன் சிறப்பாக விளையாடினார்கள். எங்களையும் வங்கதேசத்தையும் வீழ்த்தியுள்ளார்கள். நிச்சயமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் என்றார்.
அரையிறுதியில் ஆப்கன் தென்னாப்பிரிக்காவை நாளை (ஜூன் 27) காலை இந்திய நேரப்படி 6 மணிக்கு எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.