குல்பதின், அஸ்வின்.  
டி20 உலகக் கோப்பை

ஆப்கன் வீரரின் செயலுக்கு ஆதரவளித்த அஸ்வின்!

டி20 உலகக் கோப்பையில் ஆப்கன் வீரர் குல்பதின் செயலுக்கு அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையில் ஆப்கன் வீரர் குல்பதின் செயலுக்கு அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஆப்கானிஸ்தான் 115/5 ரன்களை எடுக்க வங்கதேசம் 105/10 ஆல் அவுட் ஆனது. அதனால் ஆஸி. வெளியேறியது.

இந்தப் போட்டியில் 12ஆவது ஓவரின்போது ஆப்கன் வீரர் குல்பதின் நைப் தசைப்பிடிப்பு என கீழே விழுந்தார். ஆப்கன் அணியின் பயிற்சியாளர் சைகை காட்டியதைத் தொடர்ந்து இவ்வாறு செய்தது வர்ணனையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது. அத்துடன் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனமும் செய்யப்பட்டன.

குல்பதின் அவ்வாறு செய்யாவிட்டால் வங்கதேசம் வென்றிருக்கும். ஆஸி. அரையிறுதிக்கு வந்திருக்க அதிகமான வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின், “அனைவரும் குல்பதினுக்கு அபராதம் விதிக்கும்படி சொல்கிறார்கள். ஆனால், அதில் என்ன தவறு இருக்கிறது? குல்பதின் அவருடைய நாட்டுக்காக விளையாடுகிறார். உலகக் கோப்பையில் தகுதி பெறும் முக்கியமான போட்டியில் அப்படி செய்கிறார். அதில் தவறில்லை” என்றார்.

இதற்கு முன்பாக அஸ்வின் ரெட் கார்டு கொடுக்க வேண்டுமா என கிண்டலாக எக்ஸில் பதிவிட்டிருந்தார். அதற்கு குல்பதின், “சில நேரங்களில் தசைப்பிடிப்பு சந்தோசமாக இருக்கும்போது அல்லது சோகமாக இருக்கும்போது நடக்கும்” என சிரித்துக்கொண்டே பதிலளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT