அர்ஷ்தீப், இன்ஸமாம் உல் ஹக் 
டி20 உலகக் கோப்பை

பந்தை சேதப்படுத்திய இந்திய அணி: முன்னாள் பாக். வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் இந்திய அணி மீது குற்றம் சாட்டியது பேசுபொருளாகியுள்ளது.

DIN

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டரும் முன்னாள் பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவருமான இன்ஸமாம் உல் ஹக் இந்திய அணி மீது குற்றம் சாட்டியது பேசுபொருளாகியுள்ளது.

53 வயதாகும் இன்ஸமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுத் தலைவராக கடந்த 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்டுள்ளார். ஆக.2023இல் மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதிலிருந்து ராஜிநாமா செய்தார்.

பாகிஸ்தான் அணிக்காக இன்ஸமாம் உல் ஹக் 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,830 ரன்கள் குவித்துள்ளார். அதில் 25 சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள் அடங்கும். 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,739 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் அணிக்காக ஒரு டி20 போட்டியில் அவர் விளையாடியுள்ளார். 

பாகிஸ்தான் ஊடகத்தில் பேசும்போது இன்ஜமாம் உல் ஹக், “ அர்ஷ்தீப் 15ஆவது ஓவரை வீசும்போது பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. அப்படியானால் பந்து 12-13ஆவது ஓவரில் இதற்காக தயாராகியிருக்க வேண்டும். நடுவர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதையே பாகிஸ்தான் வீரர்கள் செய்திருந்தால் பெரிய பிரச்னை ஆகியிருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் எப்படி செய்ய வேண்டுமென எங்களுத் தெரியும். 15ஆவது ஓவரில் அர்ஷ்தீப் ஸ்விங் செய்கிறார் என்றால் நிச்சயமாக ஏதோ நடந்திருக்க வேண்டும்.

பும்ரா செய்தால் இதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவரது பௌலிங் ஆக்‌ஷன் அந்தமாதிரி இருக்கும். ஆனால் மற்றவர்கள் வீசும்போது ரிவர்ஸ் ஸ்விங் ஆவது சந்தேகத்துக்குரியது. ரிவர்ஸ் ஸ்விங் ஆகுமாறு பந்து சேதப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT