இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் விலகியுள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுடன் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது. இலங்கை அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர்களிலும் மிகவும் சராசரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
இந்த நிலையில், இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் இன்று (ஜூன் 27) விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வுட், தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்ததாவது: சர்வதேச போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் செயல்பட்டதால், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. எனது குடும்பத்தினருடன் மேற்கொண்ட நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
சில்வர்வுட் பதவிக்காலத்தில் இலங்கை அணி கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பையை வென்றது. 50 ஓவர் ஆசியக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான மஹேலா ஜெயவர்த்தனே, அண்மையில் இலங்கை அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.