ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர் விட விராட் கோலி ஆறுதல்படுத்தினார்.  படங்கள்: ஜான்ஸ் /எக்ஸ்
டி20 உலகக் கோப்பை

அரையிறுதி வெற்றி: ஆனந்தக் கண்ணீரில் ரோஹித் சர்மா; தேற்றிய விராட் கோலி!

ரோஹித் சர்மா ஆனந்தக் கண்ணீர் விட விராட் கோலி ஆறுதல்படுத்தினார்.

DIN

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. விராட் கோலி முக்கியமான இந்தப் போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இருப்பினும் ரோஹித் சர்மா நன்றாக விளையாடியதால் இந்திய அணி நல்ல ரன்களை குவிக்க முடிந்தது.

அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2011, 2013இல் ஐசிசி கோப்பைகளை வென்றன. பிறகு இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை.

இதனால் இந்திய ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள். வெற்றிக்குப் பிறகு ரோஹித் ஓய்வறையில் அழுகும்போது விராட் கோலி தேற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கோலி, ரோஹித் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தப் படங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

ஆம்பூா் கலவர வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

SCROLL FOR NEXT