முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் தயாராகும் நவராத்திரி பொம்மைகள்

காஞ்சிபுரம், செப். 11:     நவராத்திரியை முன்னிட்டு சின்னகாஞ்சிபுரம் பொம்மகாரத் தெரு எனப்படும் அஸ்தகிரி தெருவில் பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி,

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:03 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 9:03 PM

காஞ்சிபுரம், செப். 11:     நவராத்திரியை முன்னிட்டு சின்னகாஞ்சிபுரம் பொம்மகாரத் தெரு எனப்படும் அஸ்தகிரி தெருவில் பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்களின் போது, பொதுமக்கள் புதியதாக பொம்மைகள் வாங்கி கொண்டாடுவது வழக்கம்.சின்னகாஞ்சிபுரம் பொம்மகாரத் தெருவில் பரம்பரையாக குலாலர் மரபினர் பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

மண், காகிதக் கூழ் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரியின் போது பொம்மை தயாரிப்பு தீவிரமாக நடக்கிறது. மழைக்காலத்தின் போது 2 மாதங்கள் பணிகள் நிறுத்தப்படுகின்றன.

Advertisement

இதுதொடர்பாக, பொம்மைகள் தயாரித்து வரும் பார்த்திபன் கூறியது:

பொம்மைகளை ஆர்டருக்கு ஏற்ப தயாரித்து தருகிறோம். ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் இங்கு தங்கி பொம்மைகளை தயாரிக்கின்றனர். ஒரு பொம்மைக்கு என குறிப்பிட்ட தொகை கூலியாக தரப்படுகிறது.

மண், காகிதக்கூழ் போன்றவற்றால் பொம்மைகளை தயாரித்து ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கண்டெய்னர் மூலம் அனுப்புகிறோம். தமிழகம் முழுவதும் காதி பவன் மூலம் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

மாணிக்கம் என்பவர் கூறியது:

பொம்மைகள் தயாரிப்புக்கு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். வங்கிகளில் கடனுதவி கேட்டால் தருவதில்லை.

மூலப் பொருள்களான காகிதழ் கூழ், கள்ள மாவு, கிழங்கு மாவு, பச்சை இலை போன்றவற்றின் விலை அதிகரித்து விட்டது. தொழிலாளர் நல வாரியம் மூலமும் உதவி செய்தால் பயன் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.