சென்னை, செப். 22: அரசு ஊழியர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்கு ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் வாகனக் கடன்களும் ஒன்று. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஊழியர்களின் அந்தஸ்து அவர்கள் பெறும் தர ஊதியத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் பெறுவதற்கான கடன் அளவையும் அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
யார் யாருக்கு எவ்வளவு? "பே பேண்ட் 4' என்ற தரத்தில் உள்ளவர்கள் (ஏ பிரிவு ஊழியர்கள்) ரூ.6 லட்சம் வரை வாகனக் கடன் பெறலாம்.
இதேபோன்று, "பே பேண்ட் 3' என்ற நிலையில் உள்ளவர்கள் ரூ.5 லட்சம் வரையிலும், அதற்கு கீழ் நிலையில் உள்ள அதே சமயம் தர ஊதியம் ரூ.2,800 வரை பெறும் ஊழியர்கள் ரூ.3 லட்சம் வரையிலும் வாகனக் கடன் பெறலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
நிதித் துறை (சம்பளம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களுக்கு மட்டுமே...""புதிய வாகனங்கள் வாங்குவதற்கு மட்டுமே கடன் தொகை பயன்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதற்கு இந்தக் கடன் தொகை அனுமதிக்கப்படாது.
இந்த உயர்த்தப்பட்ட கடன் தொகை அளவு 2009 - 10-ம் நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 5 சதவீதம் அளவுக்கு கடன் அளவின் விகிதம் அதிகரிக்கப்படும்' என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.