ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகுக் குழாம் அமைக்கலாமே!
ஸ்ரீபெரும்புதூர், ஆக. 11: ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைத்து பொழுதுபோக்கு மையம் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். ÷ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிப் பகுதிகளில் சுமார் 1 லட
ஸ்ரீபெரும்புதூர், ஆக. 11: ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைத்து பொழுதுபோக்கு மையம் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
÷ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிப் பகுதிகளில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதை தவிர ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான ஒரகடம், மாம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
÷இதனால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீஇராமனுஜர் கோயில் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தை தவிர வேறு சொல்லும்படியான இடங்கள் ஏதும் இல்லை.
÷ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பொழுதுபோக்கு மையங்கள் இல்லாததால் விடுமுறை நாள்கள் வீணாவதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதிக தொலைவு உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல எல்லோராலும் முடிவதில்லை.
÷இந்நிலையில்தான் ஸ்ரீபெரும்புதூர் ஏரியை சுற்றுலா தளமாக்கலாமே என கோரிக்கை எழுப்பத் தொடங்கியுள்ளனர் மக்கள். இந்த ஏரி 1200 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி நீரைக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைப்பெற்று வந்தது. ஆனால் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சுற்றிலும் தொழிற்சாலைகள் வந்து விட்டதாலும், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விட்டதாலும் விவசாயம் முற்றிலுமாக தடைப்பட்டு விட்டது.
÷இதனால் ஏரிநீரில் படகு குழாம் அமைத்து பொழு போக்கு மையம் ஏற்படுத்தலாம். இதனால் பேரூராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களின் விடுமுறை நாள்கள் சந்தோஷமாக கழியும்.
÷மக்களின் கோரிக்கையை தவிர்க்காமல் நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம்?