முகப்பு
தமிழ்நாடு

விபத்துகள் தொடரும் அபாயம்

சென்னை, மார்ச் 20: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்கள், சில வழித் தடங்களில் நடத்துநர் இன்றி டிரைவர்களை மட்டுமே கொண்டு இயக்கப்படுகின்றன. இதனால் டிரைவர்களுக்கு வேலைப் பளு

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:03 PM
பகிர்:

சென்னை, மார்ச் 20: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்கள், சில வழித் தடங்களில் நடத்துநர் இன்றி டிரைவர்களை மட்டுமே கொண்டு இயக்கப்படுகின்றன.

இதனால் டிரைவர்களுக்கு வேலைப் பளு ஏற்படுவதோடு, விபத்துகள் தொடரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூர், கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில், இந்த நிலை தொடர்கிறது என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

முன்னர் சென்னையில் இருந்து நீண்டதூர ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் இரண்டு டிரைவர்கள், ஒரு நடத்துனர் நியமிக்கப்படுவர். குறைந்த தூர பஸ்களில் ஒரு டிரைவகும், ஒரு நடத்துநரும் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இப்போது "டிரைவர் மற்றும் நடத்துனர்' என்ற பெயரில் ஒருவர் மட்டும் பஸ்ûஸ இயக்கிச் செல்கிறார்.

பஸ்களை நடத்துநர்கள் இன்றி டிரைவர்களால் மட்டும் இயக்குவது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு புறம்பானது.

ஆனால், ஊழியர் பற்றாக்குறை காரணமாக சட்டத்தை மீறி இதுபோல் பஸ்கள் இயக்கப்பட்டு, அதில் பயணம் செய்யும் அப்பாவி பயணிகள் பணயம் வைக்கப்படுகின்றனர் என்று டிரைவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு செல்லும் டிரைவர்களுக்கு வார ஓய்வும் சரிவர வழங்கப்படுவது இல்லை. ஓய்வின்றி தொடர்ந்து பஸ்ûஸ இயக்குமாறு, துறை சார்பில் வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் முழுமையான உறக்கமின்றி, பஸ்ûஸ இயக்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியது:

பஸ்ûஸ இயக்கும்போது, பக்கவாட்டில் வரும் வாகனங்கள் குறித்து அறிவுறுத்துவது, பஸ்ûஸ பின்புறம் இயக்க நேரிடும் போது உதவுவது உள்ளிட்ட சூழ்நிலைகளில் நடத்துனர்களின் உதவி மிகவும் அவசியம். எனவே, நடத்துனர்கள் இன்றி பஸ்ûஸ இயக்குவது மிகவும் கடினம்.

வருவாய் இழப்பு:



இதுபோன்ற பஸ்களில், முன்பதிவு செய்தவர்களையும், பஸ் புறப்படும் இடத்திலும் மட்டுமே பயணிகளை ஏற்ற முடியும். நடத்துனர் இல்லாததால், வழியில் காத்திருக்கும் பயணிகளை ஏற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என்றார்.

தொடரும் விபத்துகள்:

இதுபோல் டிரைவர்களை மட்டும் கொண்டு பஸ்களை இயக்குவதால் விபத்துகளும் தொடர்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.