தமிழ்நாடு

சிலை திருட்டு வழக்கில் 6 பேருக்கு தண்டனை ரத்து:​ உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 18: திருச்சி அருகே சிலை திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி 6 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருச்சி விக்கிரமங்கலம் அருகே உள்

தினமணி

சென்னை, மே 18: திருச்சி அருகே சிலை திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி 6 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருச்சி விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ வேத நாராயண பெருமாள் கோயிலில் கடந்த 1986-ம் தேதி சிலைகள் திருட்டுப் போயின. இதுதொடர்பாக, கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், காளி, துரை ரங்கராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செயய்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததது. இதை எதிர்த்து தண்டனை பெற்ற அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விவரம்: சிலை திருட்டு வழக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சாட்சியங்களும் அரசுத் தரப்பு வாதங்களுக்கு ஆதரவாக இல்லை. குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT