புதிய கல்லூரிகள் தொடங்க ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் 800 பேர் விண்ணப்பம்
சென்னை, ஏப். 27: புதிய பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க நாடு முழுவதும் இருந்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (ஏ.ஐ.சி.டி.இ.) 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பொறியியல
சென்னை, ஏப். 27: புதிய பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க நாடு முழுவதும் இருந்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (ஏ.ஐ.சி.டி.இ.) 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான புதிய வழிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ. அண்மையில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களையும் வரவேற்றது.
இதன்படி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஏ.ஐ.சி.டி.இ. விண்ணப்பங்களை பெற்று வந்தது. விண்ணப்பங்களைச் சமர்பிக்க மார்ச் 30 தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 20-ம் தேதி வரை நீட்டித்தது. கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 27-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
Advertisement
இதன்படி, கடைசி நாளான புதன்கிழமை வரை நாடு முழுவதிலுமிருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள், ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் அளிக்கப்பட்டுள்ளன
இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா தில்லியிலிருந்து தொலைபேசி மூலம் தினமணிக்கு அளித்த பேட்டி:
புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க, கல்லூரிகளில் ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் படிப்புகளுக்கான அனுமதியை நீட்டிக்க, புதிய படிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கு என நாடு முழுவதிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரிகளிடமிருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் புதிய பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மட்டும் 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 80: தமிழகத்திலிருந்து 80-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்காக அளிக்கப்பட்டுள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்காக வந்துள்ளன.
விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே மாதம் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் எந்தெந்த அமைப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படும்.
விண்ணப்பித்துள்ளவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் அனுமதி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.