தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் நலிவடைந்து வரும் நெசவுத் தொழில்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

தேனி: ஆண்டிபட்டியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு குறைவான கூலி வழங்கல், நூல் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நெசவாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்

கோ.ராஜன்

தேனி: ஆண்டிபட்டியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு குறைவான கூலி வழங்கல், நூல் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நெசவாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 ÷தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் 80-க்கும் மேற்பட்ட தனியார் விசைத்தறி நெசவுக் கூடங்கள் உள்ளன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான குடும்பத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

 ÷கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் அரசின் இலவச வேஷ்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கு குறைந்தகால அவகாசமும், குறைந்த எண்ணிக்கையில் திட்ட அறிக்கை வழங்கப்படுகின்றன. இதனால், ஓராண்டில் 6 மாதங்களுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள பெரும்பாலான நெசவாளர்கள், தனியார் விசைத்தறிக் கூடங்களில் பணியாற்ற ஆர்வம் காட்டுகின்றனர்.

 ÷இங்கு உற்பத்தி செய்யப்படும் வேஷ்டி, சேலைகள் ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

 ÷நூல் விலை உயர்வு, சந்தையில் நிலவும் போட்டி, உற்பத்திச் செலவுக்கும் குறைவான விற்பனை விலை ஆகியவற்றால் தற்போது பல இடங்களில் நெசவுக் கூடங்கள் மூடப்பட்டு, உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 வேலைநிறுத்தம்:÷இந் நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் சில நாள்களாக நெசவாளர்கள் ஈடுபட்டு வருவதால் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு 16 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் சக்கம்பட்டி நெசவாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை.

 ÷தங்களது கோரிக்கைகள் குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:÷இப்போது உற்பத்தி செய்யப்படும் துணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 80 முதல் ரூ. 120 வரை ஊதியம் கிடைக்கிறது. போதிய வருவாய் இல்லாததால் பலர் தேனி, ஆண்டிபட்டி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் வேலை செய்து வருகின்றனர். நெசவுத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் போதிய சலுகைகள் வழங்கப்படவில்லை. எங்களுக்கு தினக் கூலி அடிப்படையில் ஊதியம் நிர்ணயித்து, 20 சதவீத ஊதிய உயர்வும், 8 மணி நேர வேலை வழங்கவும் வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

 ÷விசைத்தறி நெசவுக்கூட உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:÷நூல் விலை உயர்வால் இப்போது உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. சந்தையில் நிலவும் கடுமையான போட்டியால் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விற்பனை விலையை அதிகரிக்க முடியவில்லை. இதனால் நெசவாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் நிர்ணயித்து வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை.

 ÷நலிந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும், மானிய விலையில் நூல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT