தமிழ்நாடு

ஸ்பெக்ட்ரம்: கலைஞர் டி.வி. விளக்கம்

சென்னை, பிப்.10: 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டிற்கும், கலைஞர் டி.வி. கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ

தினமணி

சென்னை, பிப்.10: 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டிற்கும், கலைஞர் டி.வி. கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:2007-08 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும், 2009-ல் கலைஞர் டி.வி. மற்றும் சினியுக் நிறுவனம் இடையே நடைபெற்ற கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

கலைஞர் டி.வி.க்கு, சினியுக் நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக 2009-ல் முன் பணம் கொடுத்திருந்தது. ஆனால் 2 நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்போது பெறப்பட்ட முன்பணத்தை கடனாகக் கருதி மொத்தப் பணமும் கலைஞர் டி.வி. நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டது.

அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உள்பட்டு, உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT