எல்லைக் காவலர் -தமிழறிஞர் மரபுரிமையர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை, ஜன. 8: எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 217 பேருக்கு ஓய்வூதியம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழறிஞர்கள
சென்னை, ஜன. 8: எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 217 பேருக்கு ஓய்வூதியம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
தமிழறிஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்குவது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 6-ல் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
அதையேற்று, எல்லைக் காவலர்கள் 12 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம், ரூ. 15 மருத்துவப்படி, 55 தமிழறிஞர்களுக்குத் தலா ரூ. 3 ஆயிரம், ரூ. 15 மருத்துவப் படி, தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 142 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1,500, ரூ. 15 மருத்துவப்படி வீதம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் காரணமாக, எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்களின் 217 குடும்பங்கள் பயன் அடைகின்றன. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 53 லட்சத்து 61 ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.