முகப்பு
தமிழ்நாடு

எல்காட் முடிவு: ஊழியர்கள் அதிருப்தி- இலவச டி.வி. கொள்முதலில் சிக்கல்?

சென்னை, ஜன. 29: எல்காட் நிறுவனத்தின் விளக்க நோட்டீஸôல் அதில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், இலவச கலர் டி.வி.யை கொள்முதல் செய்யும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  மின்னணு ப

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:18 PM
பகிர்:

சென்னை, ஜன. 29: எல்காட் நிறுவனத்தின் விளக்க நோட்டீஸôல் அதில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், இலவச கலர் டி.வி.யை கொள்முதல் செய்யும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வது, மென்பொருட்களைத் தயாரிப்பது, அரசுத் துறைகளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தருவிப்பது போன்ற பணிகளை "எல்காட்' நிறுவனம் மேற்கொள்கிறது.

 இந்த நிறுவனம், சென்னையில் பெருங்குடி, நந்தனம் ஆகியவற்றில் இரண்டு பெரும் பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தது. பெருங்குடியில் உள்ள பிரிவில் தொலைபேசி போன்ற கருவிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 2003-ல் அதை மூட தமிழக அரசு முடிவு செய்தது.

 பணிபுரிந்த ஊழியர்கள்: பெருங்குடி பிரிவு மூடப்பட்டதால் அதில் பணியாற்றிய ஊழியர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ஊழியர்களை நந்தனத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இணைப்பது என்றும், ஊதிய விகிதங்கள் அரசு நிர்ணயித்தன் அடிப்படையிலே அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவு 2006-ல் வெளியிடப்பட்டது.

 இந்த நிலையில், பெருங்குடியில் பணியாற்றிய ஊழியர்களில் பலர் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களைக் காட்டிலும் அதிக ஊதிய விகிதம், உயர்ந்த பதவியில் உள்ளனர். இதற்கு, தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில், பெருங்குடி ஊழியர்களுக்கு எல்காட் நிறுவனம் திடீர் விளக்க நோட்டீûஸ அனுப்பி வைத்துள்ளது. அதில், 2003-ல் பெருங்குடி நிறுவனத்தில் பணியாற்றியவர்களை, ஏன் பதவி இறக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஊழியர்கள் அதிர்ச்சி: 2003-ல் இருந்து தொடர்ச்சியாக பணியாற்றி வரும் தங்களுக்கு எல்காட் நிர்வாகம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 கலர் டி.வி. கொள்முதல் போன்ற முக்கிய பணிகளில் பெருங்குடி பிரிவில் பணியாற்றிய ஊழியர்களே ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டால் பணிகள் பாதிக்கக்கூடும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 தொடரும் தேவையற்ற செலவினங்கள்: அரசுத் துறைகளுக்கு உரிய நேரத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை எல்காட் நிறுவனம் விநியோகம் செய்வதில்லை என்ற புகார் தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பல முக்கிய துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் எல்காட் நிறுவனத்துக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

 இந்த நிலையில், ஊழியர்களை பதவி இறக்கம் செய்யும் முடிவை எல்காட் எடுத்துள்ளது. அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பொருட்களை அளிப்பதில் தாமதம் காட்டும் நிர்வாகம், தேவையற்ற செலவுகளைச் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

 நிர்வாகத்துக்கு பொது மேலாளர் என்ற நிலையில் ஒருவர் மட்டுமே இருந்தார். ஆனால், இப்போது ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேலை எதுவும் பெரிதாக இல்லை என்று எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.

 மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்காட் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தப் பணியும் இல்லை என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.