சென்னை, ஜூன் 3: திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் உரையில் கூறியுள்ளதாவது:
தமிழின் தொன்மையையும், பெருமையையும் மற்ற மொழியினரும் உணர்ந்து போற்றத் தக்க வகையில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
அந்த நூல்களை இணையதளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.
கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் தனித்தன்மை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஆக்கவும், நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தவும் மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.