தமிழ்நாடு

"ராஜீவ் ஆவாஸ் யோஜனா' திட்டத்தில் 32 லட்சம் குடிசைவாசிகளுக்கு புதிய வீடு:தங்கபாலு

சென்னை, ஜூன் 4: "ராஜீவ் ஆவாஸ் யோஜனா' என்ற மத்திய அரசின் திட்டம் மூலம் நாடெங்கும் உள்ள 32 லட்சம் குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங

தினமணி

சென்னை, ஜூன் 4: "ராஜீவ் ஆவாஸ் யோஜனா' என்ற மத்திய அரசின் திட்டம் மூலம் நாடெங்கும் உள்ள 32 லட்சம் குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய சூரிய ஆற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது 2022 ஆம் ஆண்டுக்குள் ஆண்டு தோறும் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் ஆற்றலை நாடு பெறும். மின்சார உற்பத்தி கூடுதலாவதுடன் அனைத்துத் துறைகளின் உற்பத்தித் திறனும் பெருகும்.

"ராஜீவ் ஆவாஸ் யோஜனா' திட்டம் மூலம் நாடெங்கும் 250 நகரங்களில் உள்ள 32 லட்சம் குடிசைவாசிகளுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெறும்.

மலைவாழ் பழங்குடி மாணவர்கள் உதவித் தொகை பெற பெற்றோரின் வருமான உச்சவரம்பை ரூ.1.45 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சத்திற்கு மத்திய அரசு உயர்த்தியதாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் மேலும் சில சாதியினரைச் சேர்க்க மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலாலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில மக்கள் வெகுவாக பயனடைவர்.

இவ்வாறு சிறந்த தொலைநோக்குப் பார்வையோடு மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வரும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT