முகப்பு
தமிழ்நாடு

பஸ்ஸூக்காக 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்

ஸ்ரீபெரும்புதூர், நவ. 10: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பால்நெல்லூர் கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பஸ்ஸýக்காக சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவல ந

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:04 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர், நவ. 10: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பால்நெல்லூர் கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பஸ்ஸýக்காக சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவல நிலை கடந்த 15 வருடங்களாக நீடித்து வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பால்நெல்லூர் ஊராட்சியில் பால்நெல்லூர், செலையனூர் என்ற இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களிலும் மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இல்லாமல் சற்று உள்ளடங்கி இருப்பதால் இந்த கிராமத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், வல்லம், தொளசாபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல யூனியன் சாலைகளே பயன்பட்டு வருகின்றன.

குண்டும் குழியுமான சாலை: இந்த யூனியன் சாலைகள் முறையாக பராமரிக்கபடாமல் இருப்பதாலும், புதுப்பிக்கப்படாமல் இருப்பதாலும் வல்லம் - பால்நெல்லூர் இணைப்புச்சாலை,

மாம்பாக்கம் - பால்நெல்லூர் இணைப்பு சாலை ஆகியவை தற்போது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த அவலம் கடந்த 15 வருடங்களாக நீடித்தும் வருகிறது.

நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை: 15 வருடங்களுக்கு முன்புவரை தாம்பரம் பகுதியில் இருந்து வைப்பூர், எறையூர், வல்லக்கோட்டை வழியாக பால்நெல்லூர் பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் (தடம் எண் 55எல்) இயக்கப்பட்டது. சாலைகள் படுமோசமான நிலையில் இருந்த காரணத்தால் அந்த சேவையை போக்குவரத்துக் கழகம் நிறுத்தி விட்டது.

இந்நிலையில் பால்நெல்லூர் கிராமத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து மாம்பாக்கம், ஆரனேரி, பால்நெல்லூர் வழியாக மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த மினி பஸ் எப்போதாவது ஒரு முறை மட்டுமே வந்து செல்கிறது.

இதனால் பால்நெல்லூர், செலையனூர் ஆகிய கிராமங்களில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று படிக்கும் மாணவ மாணவிகளும், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 4 கி.மீ. நடந்து வல்லம் பகுதிக்குச் சென்றும், 4 கி.மீ. நடந்து தொளசாபுரம் சென்றும், 5 கி.மீ. நடந்து மாம்பாக்கம் சென்றும் இவர்கள் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே பால்நெல்லூர் கிராமத்தை இணைக்கும் வல்லம் - பால்நெல்லூர் இணைப்புச்சாலை, ஆரனேரி - பால்நெல்லூர் இணைப்புச்சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே தாம்பரம் பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்ûஸ மீண்டும் இயக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகர பேருந்து: மேலும் சென்னை தி.நகர் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக வல்லக்கோட்டைக்கு இயக்கப்படும் மாநகர பேருந்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து பால்நெல்லூர் வழியாக வல்லக்கோட்டைக்கு இயக்க வேண்டும் என்றும், அதே போல் தி.நகர் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரத்துக்கு இயக்கப்படும் மாநகர பேருந்தை பால்நெல்லூர் வழியாக சுங்குவார்சத்திரத்துக்கு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் கிராம மக்கள். இவர்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுமா?

முழு கட்டுரையைப் படிக்க →