முகப்பு
தமிழ்நாடு

300 மெகா வாட் மிச்சமாகும்: இன்று முதல் 2 மணி நேரம் மின்வெட்டு

சென்னை,பிப். 26: சென்னையில் திங்கள்கிழமை (பிப். 27) முதல் மின்வெட்டு ஒரு மணி நேரம் கூடுதலாக அமல்படுத்தப்படுவதால், 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். தொழிற்சாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் வாரத்துக்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:52 AM
பகிர்:

சென்னை,பிப். 26: சென்னையில் திங்கள்கிழமை (பிப். 27) முதல் மின்வெட்டு ஒரு மணி நேரம் கூடுதலாக அமல்படுத்தப்படுவதால், 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும்.

தொழிற்சாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் வாரத்துக்கு ஒரு நாள் மின்சார விடுமுறை காரணமாக 800 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். வருகிற ஏப்ரல் மாதம் வரை இந்தப் புதிய மின்வெட்டு நடைமுறை அமலில் இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று முதல்: திங்கள்கிழமை முதல் சென்னை, புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு மின் வெட்டு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

Advertisement

தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு மின் வெட்டு 4 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது.

மார்ச் 1-ம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின் விடுமுறை என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது.

ஏப்ரல் வரை: இந்தப் புதிய மின்வெட்டு நடைமுறை ஏப்ரல் மாத இறுதி வரை அமலில் இருக்கும். அதற்குள் மேட்டூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டம் தொடங்கிவிடுவதோடு, காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்துவிடும் என்பதால் மே மாதம் முதல் படிப்படியாக நிலைமை சீராகும் என மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மின்வெட்டு மூலம் மிச்சமாகும் மின்சாரத்தைக் கொண்டு, சென்னையைத் தவிர பிற பகுதிகளில் மின் வெட்டு நேரம் 4 மணி நேரமாகக் குறைப்பதால் ஏற்படும் மின் தேவை அதிகரிப்பை ஓரளவு சமாளிக்க முடியும்.

இப்பகுதிகளில் மின்வெட்டு அளவை ஒரு மணி நேரம் குறைக்க 400 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும். எனவே, அனைத்து நாள்களிலும் முழுமையாகச் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.