தமிழ்நாடு

வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா?

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் போதிய கவனம் செலுத்தாததால், உள்ளூர் சேனல்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.  அதிமுக ஆட்சிக்க

தி. இன்பராஜ்

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் போதிய கவனம் செலுத்தாததால், உள்ளூர் சேனல்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

 அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 80 சதவீத ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவியில் இணைந்துள்ளனர். 90-க்கும் மேற்பட்ட சேனல்கள், மாதம் ரூ. 70 கட்டணத்தில் அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில், ஓர் இணைப்புக்கு ரூ.20 (வரிகள் தவிர்த்து) அரசுக்கும், ரூ.50 ஆபரேட்டர்களுக்கும் கிடைக்கும்.

 இந்த நிலையில், தமிழகம் முழுவதும் எந்தவித வரைமுறையும் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த ஏறத்தாழ 500 உள்ளூர் தொலைக்காட்சிகள், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன.

 பின்னர், உள்ளூர் தொலைக்காட்சிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் தொலைக்காட்சிகள் நடத்த விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஒப்பந்த மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 29.11.2011-ல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

 திருநெல்வேலி மாநகரைப் பொறுத்தவரை உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு மாதம் ரூ.3.21 லட்சம் (வரிகள் தவிர்த்து) என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மாநகரில் 10 சேனல்களுக்கு இதே கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

 இதேபோல, மாவட்டம் முழுவதும் வட்டம் வாரியாக தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு சேனல் மாவட்டம் முழுவதும் தெரிய வேண்டுமானால் ஏறத்தாழ ரூ.5 லட்சம் வரை மாதந்தோறும் அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

 இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டும் அரசுக்கு மாதம் ரூ.50 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த முறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

 இதேபோல, நாகர்கோவிலில் மட்டும் உள்ளூர் சேனல் நடத்த ரூ.8 லட்சம் வரை ஏலம் கோரப்பட்டது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் ரூ.2.21 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

 மாநிலம் முழுவதும் மாநகரப் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சிகள் நடத்த விருப்பம் தெரிவித்தவர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒருவாரத்தில் சேனல் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

 மாவட்டத்துக்கு குறைந்தது ரூ.50 லட்சம் என வைத்துக் கொண்டாலும் மாநிலம் முழுவதும் ஏறத்தாழ ரூ.16 கோடி வரை அரசுக்கு மாதந்தோறும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

 ஆனால், இதுவரை உள்ளூர் தொலைக்காட்சிக்கான ஒப்பந்தம் பெற்றவர்களுக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 இதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இரண்டு மாதத்தில் ஏறத்தாழ ரூ.32 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அரசு கேபிள் டிவி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த வருவாய் இழப்புக்கு சிலர் துணைபோவதாகப் புகார் எழுந்துள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி நடத்த ஒப்பந்தம் பெற்றவர்களிடம் இன்னும் குறைவான தொகைக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும், மறு ஒப்பந்தம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனராம்.

 மேலும், ஏலத்தில் கலந்துகொண்டு அனுமதி பெற்ற உள்ளூர் சேனல்களைத் தவிர, எந்தவித அனுமதியும் பெறாமல் சில சேனல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. இதுதொடர்பாகவும் உரிய நடவடிக்கை இல்லை.

 அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தினால், வருவாயை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT