முகப்பு
தமிழ்நாடு

கடும் குளிரால் கம்பளி ஆடை விலை அதிகரிப்பு !

சென்னை: கம்பளி ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குளிர் வாட்டி வருகிறது. இது பிப்ரவரி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:

சென்னை: கம்பளி ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குளிர் வாட்டி வருகிறது. இது பிப்ரவரி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

 இதனால் கம்பளி ஸ்வெட்டர்கள், மப்ளர், சால்வை, காதுகளை மறைக்கும் இயர் பேடுகள், குல்லா ஆகியவற்றை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இவற்றை விற்பனை செய்யும் கடைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன. 10 நாள்களில் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

Advertisement

 உதாரணத்துக்கு ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட ஸ்வெட்டர் இப்போது ரூ.180 முதல் ரூ.700 வரை விற்கப்படுகின்றன. "இயர் பேடுகள்' ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக அதிகரித்துள்ளது.

 காதுகளை மறைக்கும் குல்லா ரூ.50-ல் இருந்து ரூ.65 ஆக விலையேற்றம் கண்டுள்ளது. அனைத்து வகையிலான குல்லாக்களும் தரத்துக்கு ஏற்ப விலை அதிகரித்துள்ளது.

 சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் விற்கப்படும் இந்தப் பொருள்கள் பெரும்பாலும் சணலைப் பயன்படுத்தி நெய்யப்படுகிறது.

 துணிக்கடைகளில் இதுபோன்ற குளிர் தடுப்பு ஆடைகள் விற்பனையானாலும், சாலையோரங்களில் விதவிதமாக, விலை குறைவாக விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்குவதில்தான் மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். சென்னையில் இவற்றை விற்பபவர்கள் பிற மாநிலத்தவர்களே. இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது சொந்த மாநிலத்துக்குச் சென்று இந்தப் பொருள்களை வாங்கி வந்து விற்பனை செய்வர்.

 இந்த ஆண்டு குளிர் அதிகரித்துள்ளதால் எதிர்பாராத விதமாக விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் இருப்பு குறைவாக உள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆடைகளின் விற்பனையில் உள்ளூர் வியாபாரிகளும் பெருமளவு ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மட்டும் வெளியூருக்குத் செல்பவர்கள் இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கினர்.

 தனியார் நிறுவனத்தின் விற்பனையாளர் கே.மணிகண்டன்: "நான் என்னுடைய வேலை நிமித்தம் காரணமாக தினமும் செங்குன்றம் வரை சென்று வருகிறேன். குளிர் அதிகமாக உள்ளதால், "இயர் பேட்', ஸ்வெட்டர் வாங்கத் தீர்மானித்தேன். "இயர் பேட்' ரூ.25-க்கும், ஸ்வெட்டர் ரூ.300-க்கும் வாங்கினேன். அந்தப் பொருள்களின் தரம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் விலை அதிகரித்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments