முகப்பு
தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகள் கணினிமயம்: புறநோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை

திருவள்ளூர், மார்ச் 28: அரசு மருத்துவமனைகளில் கணினி மூலம் புறநோயாளிகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுவதால் அவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.  ÷பொதுவாக அரசு மருத்துவமனைகளில் நாள்தோ

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

திருவள்ளூர், மார்ச் 28: அரசு மருத்துவமனைகளில் கணினி மூலம் புறநோயாளிகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுவதால் அவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

 ÷பொதுவாக அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவுச் சீட்டுப் பெறுதல், தங்கள் மருத்துவக் குறிப்புகளை கையில் கொண்டு வருதல் போன்றவையே நாம் அன்றாடம் காணும் காட்சியாகும். ஆனால் தற்போது இந்நிலை முற்றிலும் மாறி விட்டது.

 ÷திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் தங்களுக்கு முன்பே தரப்பட்ட நுழைவுச் சீட்டில் இருக்கும் கணினி அடையாள எண்ணை புறநோயாளிகள் வருகை மையத்தில் காண்பித்து நேரடியாக தொடர்புடைய மருத்துவப் பிரிவுக்கு சிகிச்சைப் பெற செல்கின்றனர்.

 ÷கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நோயாளியின் மருத்துவ விவரங்களை நொடியில் மருத்துவர் அறிந்து கொண்டு அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை, மருந்து ஆகியவற்றை முடிவு செய்கிறார்.

 ÷மேலும் தொடர்புடைய நோயாளியின் மருத்துவப் பரிசோதனை விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு முறையும் நோயாளிகள் பரிசோதனை முடிவுகளை எடுத்துச் செல்லுவதும் தவிர்க்கப்படுகிறது.÷இதற்கான சாப்ட்வேரை டாடா கன்சல்டன்சி நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இச் சாப்ட்வேர்தான் பயன்படுத்தப்படுகிறது.

 ÷இதன் மூலம் நோயாளிகள் முதல்முறையாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் போது அவருக்கு என தனி அடையாள எண் தரப்பட்டு அவரைப் பற்றிய விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.

 ÷இம்முறை அறிமுகம் செய்யும் போது மருத்துவமனை ஊழியர்களுக்கு சிறிது சிரமம் ஏற்பட்டது. ஆனால் தற்போது 90 சதவீதம் அளவுக்கு நோயாளிகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 ÷உள்நோயாளிகள் பற்றிய விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. திருவள்ளூரில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சைப் பெற வருகின்றனர். ÷மொத்தம் 250-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

 ÷கடந்த 2009-10-ம் ஆண்டே நோயாளிகளின் விவரங்களை கணினிமயமாக்க சுகாதாரத் துறை முடிவு செய்தது.÷அனைத்து அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கணினிமயமாக்கப்படவில்லை.

 ÷இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: "இத்திட்டம் முதல்முதலாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 ÷தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 ÷கணினியில் பெயர், விவரங்கள் பதிவு செய்யப்பட்டவர் 2 ஆண்டுகள் கழித்து வந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவர் உட்கொண்ட மருந்து, மாத்திரைகள் குறித்து அறிந்து விட முடியும்.

 ÷இத்திட்டத்தினால் நோயாளிகள், மருத்துவர்களுக்கு உண்டாகும் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் எளிதாகிறது. விரைவில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.