முகப்பு
தமிழ்நாடு

நீர்பரப்பு சுருங்கும் அபாயத்தில் பூண்டி ஏரி

திருவள்ளூர், மே. 20: சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர்பரப்பு ஆகாயத்தாமரை செடிகளால் சுருங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  ÷தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பூண்டி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:53 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:55 PM

திருவள்ளூர், மே. 20: சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர்பரப்பு ஆகாயத்தாமரை செடிகளால் சுருங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 ÷தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி சுதந்திரப் போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

 ÷மொத்தம் 121 சதுர மைல் பரப்புடையது. கடந்த 1944-ல் பூண்டி கிராமத்தில் குசஸ்தலை ஆற்றின் அருகே இந்த ஏரி கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியாகும்.

Advertisement

 ÷பூண்டி ஏரியில் இருந்து சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு சென்னை மாநகரின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படுகிறது.

 ÷ஏரியின் நீர்மட்டம் குறையாமல் இருக்கும் வகையில் கிருஷ்ணா ஆற்று நீர் கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் பூண்டிக்குக் கொண்டு வரப்படுகிறது.

 ÷இம்மாத இறுதியில் கிருஷ்ணா நீர் வரும் வாய்ப்புள்ளது.

 ÷பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் சத்தியமூர்த்தி சாகர் அணையில் மொத்தம் 14 மதகுகள் உள்ளன. இந்த ஏரியின் கரைப்பகுதி 8 கி.மீ. நீளம் உடையதாகும். தற்போது 32 அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

 ÷பூண்டி ஏரியின் மதகுப் பகுதிகள் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதல்முறையாக அவசரகால மதகுகளை மாற்றி விட்டு புதிய மதகுகள் பொருத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 ÷அணைப்பகுதி தவிர பூண்டி ஏரியின் பிற பகுதிகளில் ஆகாயத்

 தாமரைச் செடிகள் பரவலாக உள்ளன.

 ÷இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு சுருங்கி வருகிறது. இதனால் ஏரிக்கரை பலம் இழக்கும் அபாயமும் உண்டாகி உள்ளது.

 ÷பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு பூண்டி ஏரியில் பரவலாகக் காணப்படும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியைத் தொடர்ந்து காப்பாற்ற

 இயலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.